
வேறு ஒரு புகைப்படம்தான் தேடினேன். கிடைத்தது. ஆனால் இணைக்க முடியவில்லை. எனவே அடையாளமாக ஒன்று. அவ்வளவே.
இந்த லிங்கில் க்ளிக் செய்யுங்களேன். http://www.tamilnet.com/pic.html?path=/img/publish/2008/11/12_11_08_asif_05.jpg&width=1574&height=838&caption=Political%20leaders%20of%20CPI,%20AIDMK,%20VCK,%20MDMK%20and%20AISMK%20with%20veteran%20actress%20Manorama%20expressing%20solidarity%20with%20Eezham%20Tamils%20[Photo%20courtesy:%20Janasakthi]
தமிழ்நாட்டில் கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரர்கள் சிலரில் ஒருவரை, எளிமைக்கும் தன்னடக்கத்திற்கும் இலக்கணமான ஒருவரை, எவருடன் கை கோர்த்து விட்டிருக்கிறார்கள் பாருங்கள்.
தமிழ் தேசிய உணர்வுடையோரை ஈர்க்கிறோம் என்று சற்று அளவுக்கு மீறியே போகிறார் தா.பாண்டியன். அது நெருடல்தான். ஆனாலும் எப்படியாவது ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பதும் சரியே.
ஆனால் பச்சை சந்தர்ப்பவாதி, வர்க்கப் பார்வை அறவே இல்லாதவர், பாசிஸ்டு விடுதலைப்புலிகளின் ஊது குழல்களிலேயே மிகவும் மோசமான ஒருவர், அவருக்கு அருகில் நாமெல்லாம் பிரமிக்கும், பொதுவாழ்வில் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும், ஒருவரை நிறுத்தி இப்படியா கேவலப்படுத்துவது. அய்யோ பாட்டாளி வர்க்கப் புரட்சியே.
தோழர் நல்லகண்ணுவின் முகத்தில் முடியே வளராது. ஏனெனில் விடுதலைப்போராட்ட காலத்தில் சிறையில் இருந்தபோது, அவரது மீசை முடியினை ஒவ்வொன்றாக பிடுங்கி, அங்கெல்லாம் சிகரெட்டால் சுட்டிருக்கிறார்கள்.
இதைப்பற்றி ஒரு நண்பர் கேள்விப்பட்டு, இதை எங்கும் பதிவு செய்யவில்லையே என்று ஆதங்கத்துடன் கேட்டிருக்கிறார். ஓ, அதுவா இதிலென்ன இருக்கிறது? நாம் எதுவும் நடக்கும் என்று தெரிந்துதானே அத்தைகய போராட்டங்களில் பங்கேற்கிறோம்? அப்புறம் வெட்டினான், குத்தினான், சித்திரவதை செய்தான் என்று வருத்தப்படுவதோ, பிரலாபிப்பதோ அபத்தம். அப்புறம் இதைவிட எத்தனையோ கொடுமைகளை பல்வேறு தலைவர்கள் அனுபவித்திருக்கிறார்கள், நம் மக்களுக்கும் அன்றாடம் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது… இதைப்பற்றி பேசுவானேன், விடுங்கள் என்றிருக்கிறார்.
ஆனால் பாருங்கள், பாளையங்கோட்டை கரப்பானையும் தேளையும் பற்றி இன்றும் மாய்ந்து மாய்ந்து, கவிதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள், சிறையில் மின் விசிறி இல்லாமல் இருந்த சாகசம் பற்றி மேடைக்கு மேடை முழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுடனெல்லாம் கைகோர்த்து உயர்த்திப்பிடிக்கவேண்டிய நிலை நமது நல்லகண்ணுவிற்கு.
இடதுசாரிகள் – தமிழ் தேசியம், சாதிப் பிரச்சினை குறித்து பிறகு எழுதுகிறேன்.
அது வேறு, ஆனால் இருக்கும் ஒன்றிரண்டு மிக மதிக்கத்தக்க தோழர்களையும் இப்படிக் கொச்சைப்படுத்தி, அவரும் இதற்கெல்லாம் கட்சிக் கட்டுப்பாட்டின் பெயரால் தன்னை உட்படுத்திக்கொண்டு….
தலையிலடித்துக்கொள்ள இன்னுமொரு காரணம்!
November 18, 2008 at 8:48 am
நீங்கள் ஆனாலும் இவ்வளவு கோபப்படக்கூடாது. வைகோவோடோ போனதே என்று சந்தோஷப்படுங்கள். சீமான், அறிவுமதி கும்பலுடன் கைகோர்க்க வைத்திருந்தால் என்ன செய்திருக்க முடியும்? தா. பாண்டியன் போகும் வேகத்தைப் பார்த்தால் அங்கேதான் போய் முடியும் போலிருக்கிறது.
November 19, 2008 at 8:03 am
ஹ..ஹ…ஹா…சுவைபட, சரியாகவே கூறிவிட்டீர்கள். ஆனால் இப்போது நடக்கப்போவதே வேறு. போயஸ் தோட்டத்திற்கு காவடி எடுக்கும் படலம் துவங்கியாயிற்று. இனிமேல் இலங்கையெல்லாம் என்னாகும்?